சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக் காக 26 அமைச்சர்களை அதிமுக அனுப்பியுள்ளது. அவர்களும், எப் பாடுபட்டாவது, எவ்வளவு வாக் குறுதிகளை “கொடுத்தாவது” அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்து விட வேண்டும் என்பதற்காக “திட் டம்” போட்டு வருகின்றனர். சங்கரன் கோயிலுக்கு அருகில், பாளையங் கோட்டையில் கடந்த 15 நாட்களாக போராடிவரும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. மார்க் சிஸ்ட் கட்சிதான் அந்த மாணவர் களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது. கல்லூரி தொடங்கி 8 மாதமாகியும், வகுப்புக்கள் நடத்தப்படாததால், பரித வித்து நிற்கும் அவர்களுக்காக மார்க் சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் டி.கே.ரங்கராஜன்தான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக் கிறார். – கூ.போர்விஜயன், கடலூர்

Leave A Reply