வருமான வரியைச் செலுத்தாததால் கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் 32 விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊதாரிச் செலவுக்குப் பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் நிறுவனமான கிங் பிஷர், வருமான வரித்துறைக்கு சுமார் 190 கோடி ரூபாய் வரிபாக்கி வைத்திருக்கிறது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து, செலுத்தப்பட வேண்டிய வருமான வரி மற்றும் சேவை வரி போன்ற பாக்கிகளை செலுத்தா மல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கிங் ஃபிஷர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் மிர்புரி, வருமானவரித் துறையினரால் எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன என்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறார்.

Leave A Reply

%d bloggers like this: