மன்னார்குடி, பிப்.20- கும்பகோணத்தில் அன்னை கல்விக்குழுமம் சார்பில் ஒருங்கிணைந்த திருச்சி மண்டல பொறி யியல் கல்லூரிகளுக்கிடை யேயான நுண்கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் நாகை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள் ளிட்ட மண்டல கல்லூரி களிலிருந்து நுண்கலை மற்றும் பண்பாட்டு நிகழ் வுகளான பரதம், விகடம், கேளிக்கை, நாடகம், நட னம், நாட்டுப்புற நடனம், வாய்ப்பாட்டு போன்றவற் றில் கலந்துகொண்டு ஏவிசி பொறியியல் கல்லூரி நாடக அணி முதல் பரிசினைப் பெற்றது. கேளிக்கை நாட கத்தில் இரண்டாமிடம், நாட்டுப்புற நடனத்தில் மூன்றாம் இடமும் பெற்றது. பரிசினைப் பெற்ற மாண வர்களை கல்லூரி கல்விக் குழு செயலாளர் செந்தில் வேல், பொறியியல் கல்லூரி முதல்வர் லோகநாதன், துணை முதல்வர் செல்வ முத்துக்குமரன் ஆகியோர் பாராட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: