சென்னை, பிப். 20 – மாவட்டத் தலைநகரங்க ளில் மார்ச் 1 அன்று ஆர்ப் பாட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் சங் கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் மாவட் டம் உளுந்தூர்பேட்டையில் மாநிலத் துணைத் தலைவர் பி. கிருஷ்ணசாமி தலைமை யில் நடைபெற்றது. கடந்த கால நடவடிக்கைகள் குறித்து மாநிலப் பொதுச் செயலா ளர் என். சேகர் உரையாற்றி னார். ஊரக வளர்ச்சித்துறை யில் 13 அம்சக் கோரிக்கை களை முன்வைத்து 2 கட் டப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டதன் அடிப்படையில் 9.12.2011 அன்று ஊரக வளர்ச்சி ஆணையர் மாநில நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 7 கோரிக்கைகளை நிறைவேற்று வதாக உறுதியளித்தார். ஆனால், நீண்டகாலமாக இக்கோரிக்கைகள் அரசிடம் நிலுவையாகவே உள்ளன. எனவே, உதவி இயக்கு நர் பதவி உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் கண்காணிப்பாளர் நிலையி லுள்ள, 18 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியி டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும், பொருத்துனர், மின் பணியாளர்களுக்குக் கடந்த கால குடிநீர் வடிகால் வாரியம் பணிக்காலத்தை தேர்வு நிலை சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், விடுபட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை வழங்க வேண்டும், சாலை ஆய்வா ளர்களுக்குப் பணி விதி களைத் தளர்வு செய்து ஒன் றியப் பணியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பிப்.28 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள் பங்கேற்பது என்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின்வெட் டைச் சரி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.