திருவாரூர், பிப். 20- தமிழ்தாத்தா உ.வே. சாமிநாதஅய்யரின் 158வது பிறந்தநாள் விழா வலங்கை மான் வட்டத்திலுள்ள அவ ரது சொந்த ஊரான உத்த மதானபுரத்தில் அமைக்கப் பட்டிருக்கும் அவரது நினை வகத்தில் ஞாயிற்றுக்கிழ மையன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தலைமை வகித் தார். இந்த விழாவில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் – கலைஞர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், உ.வே.சா. பற்றி இணையதளம் வாயி லாக உலககெங்கும் உள்ள வர்கள் அறிய செய்திட வேண்டும். மேலும் இந்த நினைவகத்தில் புத்தகக் கண்காட்சி போன்ற பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார். மேலும் தமிழ் தொண்டாற்றிய 30 பேருக்கு விருதுகளை வழங் கியும் பாராட்டினார். முன் னதாக உ.வே.சா.வின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார். இந்த விழாவில் துரை கண்ணு எம்எல்ஏ, ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ் வரி, துணைத்தலைவர் குரு மூர்த்தி, தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந் தம், கோட்டாட்சியர் ஸ்ரீ ராமன், வட்டாட்சியர் சுகு மார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சா.இளங்கோ வரவேற்றார். உதவி அலு வலர் அ.செந்தில் நன்றி கூறி னார்.

Leave A Reply