புதுதில்லி : 2ஜி வழக்கில் ‘முதலில் வந்தவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்ப டையில் வழங்கப்பட்ட 122 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதே கொள்கை பின்பற்றப்பட்டுவரும் சுரங்கத் துறை உள்ளிட்ட இதர துறையினரை பாதிக்கும் என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார். அரிதான இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது ஏலமுறைதான் சிறந்தது என முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரி மங்களை ரத்துசெய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத் துவது குறித்து அரசு ஆய்வுசெய்து வரு கிறது. அமல்படுத்தும்போது அதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என கபில்சிபல் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: