உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச் சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இல்லையென்பதுதான் இங்கு இருக்கிறது என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பின்தங்கிய நிலைமைக்கு அந்த மாநிலத்தை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தான் மத்தியில் நடந்து வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றதி லிருந்து பெரும்பகுதிக்காலம் காங்கிரஸ் கட்சி யின் தனி ஆட்சியும் நடந்துள்ளது. ஆனால் நிலைமை என்ன? இல்லையென்பது உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கிறது. பெரும்பகுதி இந்திய மக்களுக்கு பாதுகாக் கப்பட்ட குடிநீர் இல்லை; உணவு போதுமான தாக இல்லை; கல்வி இல்லை; வேலைவாய்ப்பு இல்லை; சாலை வசதி இல்லை; சுகாதார வசதி இல்லை என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சாத னைப் பட்டியல். சோனியா காந்தி தன்னடக்கம் காரணமாக இதை கூறாமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள் ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி தயங்கியதில்லை. நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டு, காங்கிரஸ் தலைமை யிலான மத்திய கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இந்தக் கட்சிகளின் ஆதரவைக் கோர, அல்லது விலை பேச காங் கிரஸ் கட்சி தயங்கியதில்லை. அவ்வளவு ஏன், நவீன தாராளமயமாக்கல் கொள்கை சார்ந்த அல்லது அமெரிக்க சார்பு அயல்துறை கொள்கை சார்ந்த பிரச்சனைகளில், நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகளின் போது பாஜகவின் ஆதரவை பெறக்கூட காங் கிரஸ் கட்சி வெட்கப்பட்டதில்லை. இந்த லட்ச ணத்தில் இந்தக் கட்சிகளைக் குறை கூற காங் கிரசுக்கு தார்மீக உரிமை உண்டா? உத்தரப்பிரதேசத்தில் ஊழலைத் தவிர வேறெ துவும் இல்லை என்றும் சோனியா காந்தி வருத் தப்பட்டுள்ளார். மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசோடு உத் தரப்பிரதேச மாநில அரசு, ஊழல் விசயத்தில் போட்டிக்கு வருகிறதா என்ற கோபம் சோனியா காந்திக்கு வந்திருக்கலாம். அலைவரிசைக் கற்றை ஊழல் துவங்கி காமன்வெல்த் விளை யாட்டுப்போட்டி ஊழல் வரை ஊழலுக்காக பல்கலைக்கழகம் அமைக்கும் அளவிற்கு திறன் கொண்டது காங்கிரஸ் கட்சி. நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கட்சி காங்கிரஸ். நீதிபதி ரெங்க நாத் மிஸ்ரா தலைமையிலான குழுவின் பரிந்து ரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மறுத்த கட்சி காங்கிரஸ். ஆனால் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் களத் தில், நடத்தை விதிகளுக்கு மாறாக முஸ் லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக காங் கிரஸ் கட்சியினர் கூறுவதை வேலை செய்கிற, மூளை உள்ள யாரும் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளை ஒரு விரல் நீட்டி குற்றம் சாட்டினால் மற்ற நான்கு விரல்களும் அந்தக் கட்சியை கைகாட்டும் என்பதுதான் உண்மை.

Leave A Reply