சென்னை, பிப். 20- திருக்கோவிலூர் அருகே இருளர் பெண்கள் 4 பேர் காவல்துறையினரால் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டது தொடர்பான வழக் கில், குற்றமிழைத்த போலீஸ்காரர்கள் இன்னும் ஒருவரைக்கூட கைது செய் யாதது ஏன் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதி பதி கடும் கண்டனம் தெரி வித்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் 4 பேரை கடந்த ஆண்டு நவம்பர் 22ம்தேதி நள்ளிரவு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் களை பாலியல் வன்முறைக் குள்ளாக்கினர். இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும் தலை யிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் திங்களன்று தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவ நீதிகிருஷ்ணன், அரசு ப்ளீ டர் வெங்கடேஷ், பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ஐ.சுப்பிர மணியம் ஆஜராகி, 3 பதில் மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். தமிழக உள்துறை செயலாளர், தமி ழக காவல்துறை தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பதில் மனுக்களில், நவம்பர் 22ம்தேதி நள்ளிர வில் இருளர் இனத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தவறு என ஒப்புக் கொண்டனர். எனினும் பாலியல் பலாத் கார குற்றச்சாட்டு தொடர் பாக மாஜிஸ்திரேட் விசார ணை நடத்தினார். ஆனால் அவரது அறிக்கை வர வில்லை. மருத்துவ அறிக் கையை பார்க்கும்போது பாலியல் குற்றச்சாட்டு நிரூ பிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை புலன்விசா ரணை செய்த அதிகாரி களும் பாலியல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்படவில் லை எனக்கூறியிருப்பதாக வும் தங்களது மனுக்களில் அவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கள் சார்பில் ஆஜரான வழக் கறிஞர்கள், காவல்துறை யினரின் பதில் மனுக்கள் வெட்கக்கேடனாதாக இருக்கிறது என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். நீதிபதி கண்டனம் இருதரப்பு வாதங்களை யும் கேட்ட தலைமை நீதி பதி இக்பால் “பலாத்கார குற்றச்சாட்டு நடந்ததாக கருதித்தான் ரூ.5லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ள தாக மனுதாரர் வக்கீல் கூறு கிறார். ஆனால் பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என திரும்பத் திரும்ப கூறுகிறீர்கள். போலீசார் தவிர மற்றவர் கள் சம்பந்தப்பட்டிருந்தால் விட்டிருப்பீர்களா? உடனே அவர்களை கைது செய் திருப்பீர்கள். பலமுறை நாங்கள் கூறியும் போலீசார் ஒருவரை கூட கைது செய் யாதது ஏன்? இதே நிலை நீடித்தால் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார். அரசு பப்ளிக் ப்ராசிக் யூட்டர் ஐ.சுப்பிரமணியம் குறுக்கிட்டு, “போலீஸ் விசா ரணை மற்றும் மாஜிஸ் திரேட் விசாரணை நடந்து வருவதால் முடிவு தெரியாமல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என் றார். அதற்கு நீதிபதிகள், “நள்ளிரவில் பெண்களை அழைத்துச் சென்றது தவறு என நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அப் படியிருக்கும் போது ஒரு போலீசாரை கூட கைது செய்யாதது ஏன்” என கேட் டனர். பின்னர் வழக்கு விசா ரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் பாதிக்கப் பட்ட பெண்கள் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.