மேலே உள்ள திட்டங்களைப் பார்த்தால் 20 11-12க்கான ஒதுக்கீடு பெரும்பாலும் பான்ட் விற்று வந்தால்தான் என்பது தெரியும். இந்திய ரெயில்வே 2011-12க்கான பட் ஜெட்டில் ரூ.20954 கோடி ரூபாய் பான்ட் விற்று திரட்ட திட்டமிட்டது. ரூ.11800 கோடி எஞ்சின், கோச், வேகன் வாங்கவும் அக லப்பாதை திட்டத்துக்கு ரூ.2107 கோடி யும் இரட்டைப் பாதைக்கு ரூ.5293 கோடி யும் மின்மயத்துக்கு ரூ.854 கோடியும் பான்ட் விற்று திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை ரூ.8725 கோடிதான் திரட்டப்பட்டது. அதுவே எஞ்சின் கோச் வேகன் வாங்கவே போதாது. ஜனவரி 27ல் தான் மீண்டும் பான்ட் விற்பனை செய்து இப்போது இன்னும் ஒரு ரூ.6300 கோடி திரட்டப்பட்டுள்ளது. எனவே, நடப்பு பட்ஜெட் ஆண்டில் அக லப்பாதை திட்டத்துக்கும் பான்ட் விற்று வந்தால்தான் என்பதால் பெரும்பாலும் திட் டமே செயல்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்.வி.என்.எல். கூட இந்திய ரெயில்வேயின் நிதிக் கழகம் விற்று (ஐஐசுகு) தரும் பான்ட் நிதியில் இருந்துதான் திட்டங் களை செயல்படுத்த வேண்டும். விழுப் புரம் – திண்டுக்கல் இரட்டைப்பாதை முழுக்க முழுக்க ஆர்.வி.என்.எல். தான். தஞ்சா வூர் – விழுப்புரமும் இப்படித்தான். எல்லா திட்டங்களும் திட்ட மதிப்பீட்டினை எட்ட போதிய ஒதுக்கீடு இல்லாமல் பல ஆண்டு கள் பிடிக்கும். பட்ஜெட் ஆண்டு துவக்கத்தில் ரெயில்வே அமைச்சகம் மற்ற வகைக ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மறு ஒதுக்கீடு செய்துகொள்ள பொது மேலாளர்களுக்கு அனுமதி கொடுத்த தால் அவர்கள் சம்பளம் அலவன்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பான்ட் வராத திட்டங்களுக்கு பயன்படுத்திவிட்டார் கள். சம்பளம் அலவன்சுகளுக்கான தொகை இதனால் பாதிக்கப்பட்டது. ரெயில்வே வாரியம் இப்போது அந்த அனு மதியை பின்வாங்கிவிட்டாலும் ஒரு சுற்ற றிக்கையை அனுப்பு (னுடீ.சூடி.201/நு&சு/50/11 னவ.21.11.2011) சம்பள அலவன்சுகள் வகை யில் சிக்கனம் செய்ய கூறியுள்ளது. அதில் உள்ள விவரங்கள். 1. ஓவர்டைம் அலவன்சுக்கு பதில் ஈடு கட்டும் ஓய்வு (சி.ஆர்.) கொடு. 2. 8 மணி நேர வேலையை ஜாப் அனாலி சிஸ் செய்து 12/10 மணி நேரமாக்கு. 3. கோச் அட்டென்டென்ட் வேலையை காண்ட்ராக்ட் விடு. 4. ரூ.10000க்கு மேல் ஓவர்டைம் அல வன்ஸ் போனால் னுசுஆ/ஊறுஆ ஒப்பு தல் பெறவேண்டும். 2 லட்சம் காலியிடங்கள் ரெயில்வே யில் உள்ளன. இதனை நிரப்பாததால் தான் ஊழியர்கள் அதிகநேர வேலை செய் கிறார்கள். காலியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வேலை செய்தவர்களுக்கு ஈடுகட்டும் ஓய்வு கொடுக்கச் சொல்கி றது ரெயில்வே வாரியம். ஆனால், ஓய்வு கொடுக்க ஆள் இல்லாமல்தான் அவர் கூடுதல் வேலையே செய்கிறார் என்கிற போது ஓய்வும் கிடைக்காமல் ஓவர்டைம் அலவன்சும் கிடைக்காமல் ரெயில்வே தொழிலாளி சுரண்டப்படுகிறான். என்ன செய்யவேண்டும்? ரெயில்வேயின் வரவு செலவில் எந்த நட்டமும் கிடையாது. அதன் வரவு செல வில் சென்ற (2010-11) ஆண்டு ரூ.9000 கோடி லாபம் கிடைத்தது. இதில் மத்திய அர சுக்கு ரூ.4900 கோடி லாப பங்கீடு அளித் தது. ரூ.4105 கோடி மிச்சம் இருந்தது. நடப்பு 2011-12ல் ரூ.12000 கோடி லாபம் கிடைக்குமென்றும் ரூ.6700 கோடி அரசுக்கு லாபப் பங்கீடு போக மீதி ரூ.5258 கோடி இருக்கும் என்றும் பட்ஜெட் கூறு கிறது. எனவே, ரெயில்வேயின் நிதியை பொருத்தவரை திவாலாகும் நிலை என்பது இல்லை. 2004-05ல் 16021 ரெயில் வண்டிகள் ஒரு நாளில் ஓட்டப்பட்டன. 2009-10ல் 18820 வண்டிகள் ஓட்டப்பட்டன. அதேபோல 2004-05ல் ஓராண்டில் 538 கோடி பயணி கள் பயணம் செய்தனர். 2009-10ல் 720 கோடி பயணிகள் பயணம் செய்தனர். எனவே, ரெயில்வேயின் பிரச்சனை அதன் அன்றாட வரவு செலவில் போதாக் குறை அல்ல. பிரச்சனை என்னவென்றால் ரெயில்வே யின் வளர்ச்சித் திட்டங்களுக்கு விரிவாக் கத்திட்டங்களுக்கு ரெயில்வேயே நிதி திரட்டும்படி வைக்கப்பட்டுள்ளதே பிரச்சனைக்கு காரணமாகும். நடப்பு ஆண்டில் ரூ.57000 கோடி திட்ட செலவு செய்யப்போவதாக ரெயில்வே அமைச்சர் அறிவித்தார். ஆனால், ரூ.20 ஆயிரம் கோடி பான்ட் மற்றும் ரூ.1776 கோடி தனியார் மூலதனமும் வரும் என்றார். இதில் தனியார்மூலம் ஒரு பைசாக்கூட வரவில்லை. பல எஞ்சின், கோச் ஆலைகள் திட்ட மிட்டு ரெயில்வே மூலதனமிட முடியாமல் தனியார்துறையை அழைத்துப் பார்த்து அவர்களும் வராததால் இப்போது திட்டங் கள் தரைக்கு மேல் வளரவில்லை. எப்படி ரெயில்வே நாளைய வளர்ச் சிக்கு ஈடுகொடுக்கமுடியும். ஆண்டுக்கு நாம் 180 கி.மீதான் ரெயில்வே தண்டவா ளம் போடுகிறோம். சீனா 1000கி.மீ போடு கிறது. சுதந்திரம் வாங்கியதிலிருந்து நாம் 11 ஆயிரம் கி.மீதான் தண்டவாளம் போட்டுள் ளோம். சீனா 70 ஆயிரம் கி.மீ. போட்டுள் ளது. அங்கே அரசே மூலதனமிடுகிறது. மமதா 2020 என்ற லட்சியத்திட் டத்தை அறிவித்தார். 14 லட்சம் கோடி மூல தனிமிட்டால்தான் ரெயில் தேவைகளை சமாளிக்கமுடியும் என்றார். ஆனால், 9 லட்சம் கோடி தனியாரிடமிருந்து வரும் என்றார். ஆனால், தனியார் யாரும் இது வரை முன்வரவில்லை. ஏனவே, இந்த நிலையில் அரசே முன்வந்து பெரும் மூல தமிடாமல் ரெயில் வளர்ச்சி சாத்திய மில்லை. ரெயில்வே வளராவிட்டால் அதிகரிக்கும் தேவையை ஈடுகட்டவும் முடியாது. லாபம் அதிகரிக்கவும் முடி யாது. ரெயில் வளர்ச்சிக்கு ரெயில்வே மூல தனமிடவும் முடியாது. மக்கள் போராடி அரசு மூலதனமிட அரசை நிர்ப்பந்திக்கவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.