கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் தொடர்பாக தமிழகஅரசு அமைத்துள்ள நிபுணர்குழு சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருகை தந்து ஆய்வு செய்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பாளர்களையும் சந்தித்துள்ளது. அவர்களது கோரிக்கைகளையும் கேட்டுள்ளது. இந்தக்குழு அமைப்பதற்கு முன்பு, கூடங்குளம் எதிர்ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், தமிழக அரசு அமைக்கும் குழு, கூடங்குளத்தைத் திறக்க ஒப்புக்கொண்டால் எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார். கூடங்குளம் ஆய்வுக்குப்பின், தமிழக அரசு அமைத்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் இனியன், கூடங்குளம் அணுமின்நிலையத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது. சுனாமி வந்தாலும் எந்தப்பாதிப்பும் இருக்காது என்று எடுத்துரைத்துள்ளார். உதயகுமார் தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவாரா?

Leave a Reply

You must be logged in to post a comment.