கொல்லம், பிப். 20 – கொச்சி கடற்கரைக்கு அப்பால் தமிழகம் உள்பட 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி என்ரிகா லெக்சி எண்ணெய் கப்ப லின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டு திங்கட் கிழமை கொல்லம் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட் டனர். நீந்தகரா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, பிப்ர வரி 15ம்தேதி, மீன்பிடிக்கச் சென்ற ஜெலஸ்டின் மற்றும் அஜீஸ் டிங்குவை சோமா லிய கடற்கொள்ளையர்கள் என கருதி, இத்தாலி என் ரிகா லெக்சி எண்ணெய் கப்பலின் பாதுகாப்பாளர் கள் சுட்டுக்கொன்றனர். இந்த இத்தாலி நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அந்த நபர்கள் திங்கட்கிழமை மாலை கொல்லம் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தியா – இத்தாலி ராஜ்ய பிரதிநிதிகள் இடையே 4 நாள் பேச்சுவார்த்தை நடந்த பின்னர், இத்தாலிக் கப்பல் பாதுகாப்பாளர்கள் கைதானார்கள். கொச்சி காவலர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்களி டம், கொச்சி நகர காவல் துறை ஆணையர் எம்.ஆர். அஜித்குமார் உள்பட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொல்லம் மாவட்ட காவல்துறை தலைவர் சாம் கிறிஸ்டி டேனியலும், விசாரணை செய்தார். இத்தாலி எண் ணெய்க் கப்பல், எண்ணெய் முனையத்தில் நீண்டநேரம் இருப்பதால், இதர சரக்கு கப்பல்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் எனிரிகா லெக்சி துறைமுக எல்லைக்கு கொண்டு செல் லப்படும். கப்பலின் மாலுமி உம்பர்டோ விடேலியும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். பாதுகாப்பாளர்கள் மீது கொலைவழக்கு விசார ணை நடப்பதால், எண் ணெய்க் கப்பல் ஒருவார காலத்திற்கு கொச்சி கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப் படும்.

Leave A Reply

%d bloggers like this: