இந்திய பந்துவீச்சா ளர்களின் தவறும், இந்திய மட்டையாளர்களின் திற மைக்குறைவும் இந்திய கிரிக் கெட் அணியின் தோல்விக் குக் காரணமாக அமைந் துவிட்டன. ஐந் தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 ஓட்டங் களில் இந்தியா தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கூடுதல் புள்ளியும் கிடைத்தது. நாணயச் சுண்டலில் வென்ற ஆஸ்திரேலியா முத லில் ஆடியது. ஆஸ்திரேலியா முதலில் சிறப்பாக ஆடியது என்று கூறமுடியாது. ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்க ளுக்கு மூன்று விக்கெட்டு களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியாவை மைக் கேல் ஹஸ்ஸி – பாரஸ்ட் இணை நிலை நிறுத்தி முன் னெடுத்துச் சென்றது. கடைசி ஐந்து ஓவர்களில் ஆஸ்திரே லியா 56 ஓட்டங்களை எடுத்தது. இந்தியாவின் பந்துவீச்சும் களத்தடுப்பும் மோசமாக இருந்தது. இந்திய அணிவீரர்க ளுக்கு வேகத்தையும் எகிற லையும் சமாளிக்கத் தெரிய வில்லை என்பது மீண்டு மொரு முறை நிரூபிக்கப் பட்டது. சச்சின் ஹெல் மெட்டில் லீ வீசிய பந்து அடித்தவுடன் இந்திய வீரர் கள் மனதில் பயம் உருவாகி இருக்கக்கூடும். கோலி, ரெய்னா, ரோகித் ஆகி யோர் மிகவும் தடுமாறினர். இவர்களில் ஒருவரை மாற் றிவிட்டு வேறொருவரைக் களம் இறக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோனி சிறப்பாக ஆடி 56 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவருடைய தலை மை திருப்தி அளிக்கவில்லை. அணியில் ஆடிய ஒரே சுழற்பந்தாளர் ஜடேஜா வுக்கு பந்துவீசும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.