வாஷிங்டன், பிப்.20 – அமெரிக்காவில் நடை பெற்று வரும் ‘கைப்பற்றுவோம்’ போராட்டங்கள், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றிற்கு அரபு எழுச்சிதான் காரணம் என்று தற்போது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக் கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று துவங்கிய முதலா ளித்துவ எதிர்ப்பு போராட்டங் கள் இன்று வரை அமெரிக்கா வில் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன. இந்தப் போராட் டங்களில் ஈடுபட்டதற்காக இதுவரையில் 6 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் தாக்கம் உலகம் முழு வதும் உள்ள பல்வேறு நகரங் களில் எதிரொலித்தன. தற்போது ஈரான் மற்றும் சிரியாவுக்கு எதிரான போர் முயற்சிகளுக்கும் அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப் புகள் கிளம்பியுள்ளன. நாட் டின் பல்வேறு நகர வீதிகளில் போர் எதிர்ப்பு முழக்கங்களு டன் ஊர்வலமாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இழப்பு களே போதும், இதற்கு மேல் வேண்டாம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரஸ் டிவி மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் கிட்டத் தட்ட பாதிப்பேர், துனீசியா உள் ளிட்ட பல்வேறு அரபு நாடு களில் ஏற்பட்ட மக்கள் எழுச் சிதான் தற்போது அமெரிக்கா வில் பிரதிபலித்துக் கொண் டிருக்கிறது என்று கூறியுள்ள னர். அமெரிக்க சமூக-அர சியல் கட்டமைப்புக்குள் பல் வேறு சவால்கள் உருவாகியுள் ளன என்று 40 விழுக்காட்டி னர் கருதுகிறார்கள். ஆனால் இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் அரங்கில் மாற்றங்களை ஏற் படுத்திவிடும் என்று பெரும் பாலான மக்கள் கருதவில்லை. உடனடியாக மாற்றம் இல் லையென்றாலும், போராட்டங் கள் தொடர்ந்தால் வருங்காலத் தில் மாற்றங்கள் வரும் என்ப தில் பலர் நம்பிக்கை தெரிவித் துள்ளார்கள். பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 7 ஆயிரத்து 699 பேர் இதில் கருத்து கூறியிருக் கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: