சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன், ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. இதன் தொடர்ச்சியாக நரிக்குடி அருகே பள்ளி ஆசிரியர் களை மாணவர்கள் மிரட்டுவதாக செய்தி வந்தது. இந்த நிலையில் உடுமலை அருகே மாணவனை ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதால், பள்ளியிலேயே மாண வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்துடன் தன் சாவுக்கு ஆசிரியர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. தங்கள் குழந்தைகள் அதிக மதிப் பெண் பெற வேண்டும் என்ற பெற் றோரின் ஆசைகள், நூறு சதவீத தேர்ச் சியை தங்கள் பள்ளி எப்படியாவது காட்ட வேண்டும் என்ற பள்ளிகளின் கெடுபிடிகள், ஆசிரியர்- மாணவர் உறவில் பெரும் சிக்கலை உருவாக்கி யுள்ளது. லாரி எடைபோடும் நிலையங் களில் கூட இத்தனை டன்னுக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பள்ளிக்குழந்தைகளின் பாடச்சுமை குறித்து அரசு சாதிக்கும் மௌனம் இச்சிக்கலின் ஆரம்பப்புள் ளியாக உள்ளது. – இரா.வசந்தபாலன், மதுரை-2.

Leave A Reply

%d bloggers like this: