தமிழகத்தின் அகலப்பாதை திட்டங் களுக்கு மொத்தம் ரூ.6266 கோடி தேவை. இது, ரெயில்வே மூலம் நடைபெறவேண் டிய தொகையாகும். ஆர்.வி.என்.எல். என்ற அமைப்பு மூலம் ரூ.605 கோடி முதலீடு செய்யப்படுமென்று பட்ஜெட் கூறுகிறது. ஆனால், இதுவரை ஆன செலவைப் பார்த் தால் ரெயில்வே ரூ. 2930 கோடி தான் செலவு செய்துள்ளது. நடப்பாண் டில் ரூ.14 கோடிதான் ஒதுக்கியது. பான்ட் விற்று அதன்மூலம் ரூ.319 கோடியும் ஆர்.வி. என்.எல். மூலம் ரூ.110 கோடியும் முதலீடு செய்யப்படு மென்கிறது பட்ஜெட். இந்த தொகை எதுவும் நடப்பாண்டில் இது வரை வந்துசேரவில்லை. இன்னும் ரெயில்வே மூலம் ரூ.2712 கோடியும் ஆர்.வி. என்.எல். மூலம் ரூ.388 கோடியும் வந்தால்தான் திட் டம் முடியும். தஞ்சை-விழுப்புரம் லைனுக்கு ரெயில்வே இன்னும் ரூ.168 கோடியும் ஆர்.வி. என்.எல். இன்னும் ரூ.232 கோடி யும் செலவு செய்தால்தான் திட்டம் முடி யும். கொல்லம்-திருநெல்வேலி-தென் காசி-திருச்செந்தூர்-விருதுநகர் பாதை களுக்கு ரூ.1029 கோடி தேவை. இது வரை செலவானது. இதுவரை செலவானது ரூ.615 கோடி. இன்னும் 334 கோடி தேவை. மயிலாடுதுறை-காரைக்குடி-திருத் துறைப்பூண்டி-மன்னார் குடி-பட்டுக் கோட்டை லைனுக்கு ரூ. 1005 கோடி தேவை. ரூ.111 கோடிதான் செலவு செய் யப்பட்டுள்ளது. நடப் பாண்டில் பான்ட் விற்று ரூ.150 கோடி வருமென்றும் பாக்கி 745 கோடி என் றும் பட்ஜெட் கூறுகிறது. ஆனால், அந்த ரூ.150 கோடியில் ஒரு பைசா கூட வரவில்லை. இதேபோல திண் டுக்கல்-பொள்ளாச்சி-கோவை-பாலக் காடு திட்டம் முடிய இன்னும் ரூ.472 கோடி தேவை. இந்த ஆண்டாவது போதிய நிதி ஒதுக்க மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.