புதுதில்லி: 2 பொதுத்துறை வங்கிகள் தங்களின் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. வங்கிகள் தங்கள் இருப்பு விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதையடுத்து அந்த வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளன. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி தனது வட்டி விகிதத்தை 0.11 சதவீதம் குறைத்துள்ளது. அதேபோல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் தனது வங்கிக் கடன் வட்டி விகிதத்தில் 0.15 சதவீதம் குறைத்துள்ளது. மற்ற வங்கிகளும் விரை வில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தற்போது வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 10.75 சதவீதத்தில் இருந்து 11.75 சதவீதம் வரை உள்ளது குறிப் பிடத்தக்கது.

Leave A Reply