புதுதில்லி, பிப்.19- சனிக்கிழமை மாலை யில் இந்தியா எத்தனை கோல்களில் வெற்றி பெறும் என்ற கேள்வியுடன் இந் தியா – சிங்கப்பூர் ஹாக்கி போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மனநிறைவுடன் சென்றனர். ஆயினும் அவர் கள் மனதில் ஒரு சிறிய வருத் தம் இருக்கவே செய்தது. இந்திய மகளிர் அணி உக் ரைன் அணியுடன் சமன் செய்துகொண்டதே அதற் குக் காரணம். 2012 லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் பங் கேற்கும் தகுதியுடைய ஒரு அணியைத் தேர்வு செய்யும், ஆடவர், மகளிர் ஹாக்கி போட்டிகள் சனிக்கிழமை யன்று புதுதில்லி மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டே டியத்தில் நடைபெற்றது. இந்திய ஆடவர் அணியும் சிங்கப்பூர் அணியும் மோதிய போட்டியில் இந்தியா 15-1 என்ற கோல்களில் வென் றது. மகளிர் பிரிவில் இந்தி யாவும் உக்ரைனும் 1-1 எனச் சமன் செய்துகொண்டன. இந்திய அணியின் அனு பவமும் திறமையும் சிங்கப் பூர் அணியை மிரள வைத் தது. முதல் பத்து நிமிடங் களுக்கு இந்திய அணியின் கூர்மை தவறாக இருந்தது. குறைந்தது எட்டு அடிகள் கோலுக்கு மேலேயோ, பக்க வாட்டிலோ, கம்பத்திலோ பட்டுச் சென்றன. ஆனால் முதல் கோல் அடித்தவுடன் மடை திறந்ததுபோல் கோல்கள் விழுந்தன. இருப் பினும் 20க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் தவறின. நான் நினைத்தபடி நடக்கவில் லை என்று இந்தியப் பயிற் சியாளர் மைக்கேல் நோப்ஸ் வருத்தப்பட்டார். குர்விந்தர் சிங் சண்டி (10, 21, 40ம் நிமிடங்கள்) சிவேந் திரா சிங் (18,30), டேனிஷ் முஸ்தபா (25, 52), எஸ்.வி. சுனில் (54, 57), சர்தார் சிங், காண்டேகர், சந்தீப் சிங் எஸ்.கே. உத்தப்பா, யுவ்ராஜ் வால்மீகி, பிரேந்திர லக்ரா ஆகியோர் கோல்களை அடித்தனர். இதற்கிடையில் சிங்கப்பூர் வீரர் என்ரிகோ மரிகன் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். ஆடவரில் கனடா, இத் தாலியை 9-0 என்றும் பிரான்ஸ் போலந்தை 2-1 என்றும் வென்றன. மகளிர் போட்டியில் உக் ரைன் அணி 26வது நிமி டத்தில் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித் தது. இந்திய அணி 4வது நிமிடத்தில் கோல் அடித் துச் சமன் செய்தது. கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார் னர் முடியும் முன் இறுதி ஊதல் அடிக்கப்பட்டது. ஆட்டம் முடிந்தபின் அது தவறு என்று நடுவர்கள் கூறியபோதும் முடிவு மாறவில்லை. இந்திய அணியின் கோல் அடிக்கும் கூர்மை யில் பலவீனம் வெளிப்பட் டது. இந்திய அணி அடுத்த நான்கு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. மற்ற போட்டிகளில் தென் ஆப் ரிக்கா, போலந்தை 2-1 என்று வென்றது. கனடாவும் இத் தாலியும் 2-2 எனச் சமன் செய்துகொண்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.