காரியாபட்டி, பிப். 19- கடந்த ஆண்டு வெங்காயம் கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்றது. இந்த ஆண்டு ரூ.5 முதல் 10க்கு விற்பனை ஆகி றது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள் ளனர். எனவே, வெங்காயத்தின் விலையை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காரியாபட்டியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு மாரிமுத்து தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி பேசினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.முரு கன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் மாவட்டச் செயலாளர் அ.விஜயமுருகன் கண்டன உரையாற்றினார். வட்டச் செயலாளர் அம் மாசி, பொருளாளர் முத்து உட் பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: