மாலே, பிப். 19- மாலத்தீவில் புதிய ஆட்சி. பொறுப்பேற்றுள்ள அரசு முன்கூட்டியே தேர் தல் நடத்தப்படும் என்ற உறுதி மொழியை நிறை வேற்ற வேண்டும் என பதவியில் இருந்து தூக்கியெ றியப்பட்ட ஜனாதிபதி முக மது நஷீத் வலியுறுத்தினார். இந்தியா நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் தேர்தலை முன்கூட் டியே நடத்துவதாக மாலத் தீவு புதிய அரசு தெரிவித்து இருந்தது. நஷீத்தின் பதவி விலகலை ஆய்வு செய்வதற் காக காமன்வெல்த் அமைச் சகக் குழு வந்த மறுநாள் நஷீத் இவ்வாறு கோரிக்கை எழுப்பினார். நஷீத்தின் எம்டிபி கட்சி, உடனடி தேர்தல் நடத்தக் கோரி 2வது நாளாக சனிக் கிழமை பேரணி நடத்தியது. நாட்டில் ஜனநாயகரீதியாக தேர்வு செய்யப்பட்ட 44 வயது நஷீத் மக்கள் உடனடி தேர்தலை விரும்புவதாக தெரிவித்தார். மாலத்தீவு பிரச்சனையில் சரியான நேரத்தில் தலையிட்ட இந்தியாவை நன்றியுடன் பார்க்கிறோம் என எம்டிபி கட்சி கூறியது. மாலத்தீவில் தற்போது 59 வயது முகமது வகீத்ஹ சன் ஜனாதிபதியாக புதிய அரசில் உள்ளார். இந்தியா வின் வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மத் தாய், இரண்டு நாள் பயணமாக மாலேவில் தங்கி, ஹசன், நஷீத் மற்றும் இதர தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நாட்டை பிரச்னை யில் இருந்து விடுவிக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டதாக ரஞ் சன் மத்தாய் தெரிவித்தார். மாலத்தீவில் அனைத் துக் கட்சியினரின் நடவடிக் கையை அமெரிக்க வெளி யுறவுத்துறை வரவேற்றுள் ளது. அமெரிக்க வெளியுற வுத் துறை செய்தித் தொடர் பாளர் விக்டோரியா நுவாந்த் கூறுகையில், மாலத்தீவில் அரசியல் தீர்வு காண அந் நாட்டின் அனைத்துக் கட் சிகளையும் வலியுறுத்தியுள் ளோம் என்றார். மாலத்தீவில் நடந்த அரசியல் கலகத்தில் அன் றைய ஜனாதிபதி நஷீத் பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதில் ராணுவத்தின் பங்கு இருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.

Leave A Reply