விருதுநகர், பிப். 19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை கள் திருவில்லிபுத்தூர் ஒன்றியம் வடக்கு கரிசல்குளம், கொத்தங்குளம் மற்றும் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் வரகுணராமபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது. வடக்கு கரிசல் குளத்தில் கிளைத் தலைவராக தங்க ராஜ், செயலாளராக பொன்னையா, பொருளாளராக சித்தரபுத்திரன், துணைத் தலைவராக செல்வகுமார், கிருஷ்ணகுமார்,துணைச்செயலாளர்களாக கணேசன், கோவிந்தராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மாவட்டச் செயலாளர் பி.பாலசுப்பிரமணி யன் விளக்கி பேசினார். கொத்தன்குளத்தில் கிளைத் தலைவராக செல்வ குமார், செயலாளராக ஆவுடைக்கண்ணன், பொரு ளாளராக கருத்தராஜா, துணைத் தலைவர்களாக வைரக்கனி, ராஜா, துணைச் செயலாளர்களாக கருப் பசாமி, செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். மாவட்ட பொருளாளர் எஸ்.வி.சசிக்குமார் விளக்கி பேசினார். வரகுணராமபுரத்தில் கிளைத் தலைவராக ராமர், செயலாளராக ராஜகோபால், பொருளாளராக முனி யசாமி, துணைத் தலைவராக விஜய், துணைச் செய லாளராக காளிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். ஒன்றியச் செயலாளர் எம்.கே.பழனிச்சாமி, சவுண்டீஸ்வரன் ஆகியோர் விளக்கி பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.