நாகர்கோவில், பிப்.19- வனத்துறை ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி சுட் டுக் கொல்லப்பட்ட வழக் கில் வனத்துறை அமைச்சர் பச்சைமாலின் உதவியா ளரும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா ளருமான புத்தேரியைச் சார்ந்த சகாயம் என்ற ஐயப் பன் மற்றும் முண்டக் கண் ணன், மோகனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தின் மனைவி யோகீஸ்வரியின் குடும்பத் திற்குச் சொந்தமான சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு யோகீஸ்வ ரியின் 3 சகோதரர்கள் வாரி சுதாரர்கள். அதில், 2 பேர் இறந்து விட்டனர். தற் போது முருகேசன் எனும் சகோதரர் மட்டுமே உள் ளார். அவரிடமிருந்து சொத் துக்களின் ஆவணங்களை சகாயம் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதையொட்டி, யோகீஸ்வரிக்கும் சகாயத் திற்கும் பிரச்சனை ஏற்பட் டதாகவும் அதன் பேரில் இக்கொலை நடந்திருக்க லாம் என்பதே சகாயம் கைதுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply