மதுரை,பிப்.19- நாகையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஏற்றப்படும் தியாகி லீலாவதி நினைவுக்கொடி, மதுரையிலிருந்து சனிக்கிழமை யன்று எடுத்துச் செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20 வது மாநாடு நாகையில் நடை பெறு கிறது. இம்மாநாட்டில் வில்லா புரம் வீராங்கனை லீலாவதி நினை வுக்கொடி ஏற்றப்படுகிறது. கட்சி யின் மாநில செயற்குழு உறுப் பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கொடியை பயணக்குழு தலைவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன் மாறன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் எம்.கந்தசாமி, எஸ். கே.பொன்னுத்தாய்(மதுரை புற நகர்), கே.செல்வராஜ்(புதுக்கோட் டை) ஆகியோரிடம் எடுத்துத்தந் தார். தொடர்ந்து ஞாயிறன்று காலை மதுரை பீ.பீ.குளத்திலிருந்து செம் பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் செந்தொண்டர்கள் அணிவகுத்து வர, கட்சியின் 20வது மாநில மாநாட்டில் வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவாக ஏற்றப் பட உள்ள மாநாட்டுக்கொடி புதூர், மாட்டுத்தாவணி வழியாக யா.ஒத்தக்கடையை அடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் சி.ராமகிருஷ்ணன் தோழர் களின் உற்சாக முழக்கங்களுக் கிடையே கொடியை பயணக்குழுத் தலைவர் என்.நன்மாறனிடம் வழங் கினார். கிழக்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.பி.இளங்கோவன் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரா.அண்ணாதுரை எம்எல்ஏ மாநகர் மாவட்டச்செயலாளர் பா.விக்ரமன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மேலூரில் தாலுகா செயலாளர் மணி தலைமையில் பயணக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பா.ரவி, டி.செல்லக்கண்ணு, சொ.பாண்டியன், இரா.லெனின், பி.ராதா, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், வாடிப் பட்டி ஒன்றியச் செயலாளர் வேல் பாண்டி, செல்லூர் பகுதிக்குழு செயலாளர் நரசிம்மன், வாலிபர் சங்க விளையாட்டுக்கழகச் செய லாளர் பாலுச்சாமி, மேலூர் தாலுகா செயலாளர் மணி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், கௌரி, ஜெயராமன், பெரியவர், பொன்.கிருஷ்ணன், மாநகர் மாவட் டக்குழு உறுப்பினர் ஜெயச்சந் திரன், என்.மூர்த்தி, எம்.பாலு, கே. சேகர், எஸ்.எம்.மணிமேகலை, துபாய்பாண்டி, பி.சரசு, சி.கண் ணன், அடக்கிவீரணன்,சிங்கார வேலன்,அய்யணபிள்ளை, ராஜேஸ்வரன்,பெரியசாமி, டி.பி. சின்னழகன் உட்பட ஏராளமா னோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: