புதுதில்லி: மேலும் 71 எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. அதில் 12 ஹெலிகாப்டர்கள் உள்துறை அமைச் சகப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். ஏற்கனவே இதுபோன்று 80 ஹெலி காப்டர்களை வாங்க ரஷ்யாவிடம் இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களின் மேம்படுத்தப்பட்ட ரகமாகும். இவை போர் ஹெலிகாப் டர்கள் ரகத்தில் வருகின்றன. இவற்றால் மிக உயர்வான இடங் களுக்கு அதிகப்படியான பளுவை தாங்கிச் செல்ல முடியும். மேலும் இதன் சுடும் திறனும் அதிகமாகும். வானிலை ரேடாரும், ஆட்டோ பைலட் முறையும், இரவு நேரத்திலும் துல் லியமாக படமெடுக்க உதவும் நவீன கேமராக்களும் இதில் உள்ளன.

Leave A Reply