கொச்சி: 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பலின் பாதுகாவலர் கள் 2 பேர் ஞாயிறன்று கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு கொச்சியில் போலீ சாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஓரிரு தினங்கள் அவர்களை கொச்சியில் விசாரித்துவிட்டு பின்னர் கொல்லம் போலீசாரிடம் ஒப்படைக்க கொச்சி போலீசார் முடிவுசெய்துள்ளனர். அதன் பிறகு கொல்லம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் என்று தெரிகிறது. இந்த 2 பாதுகாவலர்கள் மீதும் 302-வது பிரிவின்கீழ் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கேரள ஐஜி பத்மகுமார் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். அவர்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு கொச்சி மற்றும் கொல்லம் போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

Leave A Reply