திருப்பூர், பிப். 19- திருப்பூர் மாவட்டத் தில் நீடிக்கும் 10 மணி நேர மின் துண்டிப்பால் 32 சதவிகிதம் சிறு, குறு பனி யன் தொழிலகங்கள் திருப் பூரை விட்டு வெளிமாநிலங் களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டதாக செகண்ட் காலர் சர்ட் மற்றும் உள் ளாடை சிறுதொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) கூறியுள்ளது. தற்போதைய மின்வெட் டால், ஒப்புக்கொண்ட ஆர்டர்களை செய்துதர முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. பணப் பரிவர்த்தனை முடங்கிப் போயுள்ளது. அரசு பட் ஜெட்டில் கூடுதலாக 3ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட் டதாக அறிவிக்கப்பட் டது. அது எப்போது நடை முறைக்கு வரும் என்று அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். இப்போது போல் 10 மணி நேர மின் வெட்டு நீடித்தால் அடுத்த ஆறு மாத காலத்தில் 70 சதவிகிதம் தொழிலகங்கள் இங்கிருந்து இடம் பெயரும் ஆபத்து இருக்கிறது. மேலும் மின்வெட் டால் மக்களுக்கு ஏற்படும் மெழுகுவர்த்தி கூடுதல் கட் டண சுமையைக் கருத்தில் கொண்டு இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதற்கு பதிலாக இலவச எமர் ஜென்சிலைட்டை உடனடி யாக வழங்க வேண்டும். மின்வெட்டுப் பிரச் சனை தீரும் வரை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிஸ்மா பொதுச் செயலா ளர் கே.எஸ்.பாபுஜி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: