நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல் ஈரோடு, பிப்.19- கள்ளநோட்டுகளால் பாதிக்கப்படும் டாஸ்மாக் ஊழியர்களின் சிரமத்தை போக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) மாவட்ட நிர்வா கக் குழுக் கூட்டம், துணைத் தலைவர் எம்.என். குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டு காரணமாக குறிப்பாக இரவு நேரங்களில் டாஸ் மாக் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மின்வெட்டால் விற்பனை பாதிப்பு ஏற்படுவதுடன் பாட்டில்களை கையாளும் போது சேதாரம் ஏற்படு கிறது. மேலும் சில விஷமி கள் குறிப்பாக கள்ளநோட்டு மாற்றும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் கடைகளில் மாற்றி விடுகின்றனர். இர வில் மின் தடை மற்றும் விற்பனை அதிகம் இருக்கும் நேரம் என்பதால் டாஸ்மாக் ஊழியர்களால் ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்ய முடிவதில்லை. இத னால் டாஸ்மாக் ஊழியர் கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் நிர்வாகம் உட னடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் கடைகளுக்கும் யு.பி. எஸ். அல்லது ஜெனரேட் டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ் மாக் ஊழியர்களும் கலந்து கொள்வது. இதேபோல் டாஸ்மாக் ஊழியர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னம் (சி.ஐ.டி.யு) சார்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் 30 மற்றும் மே 1 ஆகிய தேதி களில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் பெரும் திரளா கக் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பொன்.பாரதி, பொருளா ளர் ஜி.சி. சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் வி.ரா ஜேந்திரன், பி.மூர்த்தி, ஏ. என். செந்தில்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.