குர்கான்: மானியப் பலன்கள் ஏழைகளை சரியாக சென்றடையாததால் தூக்கத்தை இழக்கிறேன் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். தலைநகர் தில்லியை அடுத்து உள்ள குர்கானில் மானியக்கசிவு குறித்து, பிரணாப் முகர்ஜி, ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், மானியத்தின் அளவை பார்ப்பதால் தூக்கத்தை இழக்கவில்லை. மானிய பலன்களில் கசிவு, ஏற்பட்டு, ஏழை மக்களை சரியாக சென்றடையாததை எண்ணி தூக்கத்தை இழக்கிறேன் என்றார். ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறுகையில், அனைத்து மக்களுக்கு ஒரு மித்த அடையாள அட்டை தரும் ஆதார் திட்டத்தால் மானியம், ஏழைகளை சரியாக சென்றடையும் ஸ்வாபிமான் போன்ற திட்டத்தை சேர்த்து வங்கிகள் பெரும் பங்காற்ற முடியும். கிராமங்களில் உள்ள பெருமளவு மக்களுக்கு வங்கி செயல்பாடு அளிப்பதன் மூலம், பெரும் பணியாற்ற முடியும் என்றார். வங்கிகள் மூலமாக, மானியத்தை அளித்தால், ஏழைகள் அல்லாத இதர நபர்கள் பலனை பெறும் மானியக்கசிவு, பெருமளவு குறையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாதத் துவக்கத்தில் பிரணாப் முகர்ஜி கூறுiகியல், மானிய அளவு பெருகி வருவதால் தூக்கத்தை இழக் கிறேன் என்றார். பின்னர், கருத்தை திருத்தி இந்தியப் பொருளாதாரம், எந்தச் சவாலையும் என்றார். தில்லியல் பிப்ரவரி 8ம்தேதி மாநாட்டில், அவர் பேசும்போது மானியத் தின் மிக மோசமான நிலையை எண்ணி தூக்கத்தை இழந்ததாக குறிப்பிட்டிருந் தார். மானிய அளவை ரூ.1லட்சம் வரை உயர்த்த வேண்டி உள்ளது என அரசு முன்னர் தெரிவித்திருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.