தேனி, பிப். 19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டு பேர ணிக்கு தேனி மாவட்டத் திலிருந்து 50க்கும் மேற் பட்ட வாகனங்களில் செல்ல தேனி மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. கட்சியின் இடைக் கமிட்டி செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எல்.ஆர். சங்கரசுப்பு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி. வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி. அண்ணாமலை இடைக் கமிட்டி செயலாளர்கள் ஜி.எம்.நாகராஜன், கே.தயா ளன், எம்.ராமச்சந்திரன், வி.மோகன், கே.சஞ்சீவ் குமார், பி.மணவாளன் உள் ளிட்டோர் கலந்துகொண் டனர். கூட்டத்தில் 25ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டு பேரணியில் தேனி மாவட் டத்திலிருந்து 50 வாகனங் களில் 2500க்கும் மேற்பட் டோர் கலந்துகொள்வது என்றும், செந்தொண்டர் கள் அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவும் முடிவு செய் யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.