அகர்தலா, பிப். 19- மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையம் (அமைப் பின் செயல்பாடுகள், அதி காரங்கள் மற்றும் கடமை கள்) 2012 என்ற உத்தரவு மாநில அரசுகளின் அதிகா ரங்கள் மீது மத்திய அரசு நடத்தும் ஆக்கிரமிப்பாகும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழு தியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். இந்த உத்தரவை திரும் பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத் துக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். நாட்டில் தீவிரவாதத்தொல்லையைத் தீர்க்கமாகக் கையாள்வது குறித்த திட்டமான பொருத் தமான நடைமுறையை உரு வாக்குவது பற்றி அனைத்து மாநிலங்களுடனும் பரந்து பட்ட விவாதத்தை நடத் தும் நடைமுறையைத் தொடங்க வேண்டும் என் றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். இந்திய அரசியல் சட் டப்படி ‘பொது ஒழுங்கு’ மற்றும் ‘காவல்துறை’ ஆகி யவை மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட வை. எனவே உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்த ரவு மாநில அரசுகளின் அதி காரங்கள் மீது திணிக்கப் படும் ஆக்கிரமிப்பாகும் என்று மாணிக் சர்க்கார் சுட் டிக்காட்டியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட பிரச்சனை கள் மாநில அரசுகளோடு தொடர்புடையவையாக இருக்கும் வேளையில் மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்காமல் இந்த உத் தரவு வெளியிடப்பட்டிருப் பது வியப்பளிப்பதுடன் வேதனையளிப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார். நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையா கும். ஆனால் கூட்டாட்சிக் கட்டமைப்பு என்ற அரச மைப்புச் சட்ட வரம்பை மீறுகின்ற போக்கு தற் போது அதிகரித்து வரு கிறது என்பதை அவர் வருத் தத்துடன் குறிப்பிட்டுள்ள துடன் இப்போக்கு களை யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக வெளியிட் டுள்ள இந்த உத்தரவு, மத் திய – மாநில அரசுகளி டையே தவறான புரிதலை ஏற்படுத்தும். என்ன கார ணத்திற்காக இந்த ஆணை கள் வெளியிடப்பட்டதோ, அதையே இந்த ஆணை அழித்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். மாநில அர சின் செயலாக்கமிக்க நட வடிக்கைகளும், அந்நடவ டிக்கைகளுக்கு மத்திய அரசும், அமைதியை விரும் பும் திரிபுரா மக்களும் அளித்த ஆதரவும் திரிபுரா வில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: