இராஜபாளையம், பிப். 19- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளராக தா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 22வது மாநாடு பிப்ரவரி 17ல் தொடங்கி 19 வரை இராஜ பாளையத்தில் நடைபெற் றது. மாநாட்டின் இறுதி நாளான ஞாயிறன்று இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளராக, ஒரு மனதாக தா. பாண்டியன் மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் 125 மாநிலக்குழு உறுப்பினர் களும், 6 மாநில கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் களும் தேர்ந்தெடுக்கப்பட் டனர். 2005 மார்ச் 5ல் இருந்து 8 வரை திருவாரூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாட் டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக முதன் முறையாக தேர்வு செய்யப் பட்ட தா.பாண்டியன், 2008 பிப்ரவரி 29 முதல் மார்ச் 3 வரை புதுக்கோட்டையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநாட் டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இரண்டா வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டார். இப் போது மூன்றாவது முறை யாக மாநிலச் செயலாள ராக தா.பாண்டியன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட் டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: