மதுரை,பிப்.19- பேருந்தில் பயணிகளிடம் நைசாக கொள்ளைய டிக்கும் கும்பலைச் சேர்ந்த மூன்று பெண்கள் மதுரையில் பிடிபட் டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன. விருதுநகரைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருமங் கலத்தில் இருந்து பேருந்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலை யத்திற்கு வந்துள்ளார். அப் போது அவர் அருகே 3 பெண் கள் வந்து நின்றுள்ளனர். பழங் காநத்தம் அருகே அப்பெண் கள் வேக, வேகமாக பேருந் தில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது தனது பையில் இருந்த 5 பவுன் நகை காணா மல் போனதைப் பார்த்து அதிர்ச் சியடைந்த சுப்ரமணியம் சத்தம் போட்டுள்ளார். பேருந் தில் இருந்த பயணிகள் அப் பெண்களை விரட்டிச்சென் றுள்ளனர். பழங்காநத்தம் அருகே ரோந்து சென்ற காவல்துறை யினர் அப்பெண்களைச் சுற்றி வளைத்து சுப்பிரமணியபுரம் காவல்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு விசாரணை யில் அவர்கள், வெளிச்சநத்தத் தைச் சேர்ந்த மூர்த்தி என்ப வரது மனைவிகள் கவிதா (33), மணிமாலா (30), மேலூர் ஆட் டுக்குளத்தைச் சேர்ந்த மனோ கரன் மனைவி பாலசுந்தரி(30) எனத்தெரியவந்தது. பேருந்து களில் தொடர்ந்து இவர்கள் கொள்ளையடிப்பது விசார ணையில் தெரியவந்தது. அவர் களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 பவுன்நகைகள், இரண்டு செல்போன்கள், வெள் ளிக்கொலுசுகள் மீட்கப்பட்டுள் ளன. இதுகுறித்து சுப்பிரமணிய புரம் காவல்துறையினர் அவர் களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: