மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு பிப்ரவரி 22 முதல் 25ந் தேதி வரை நாகப்பட்டினம் நகரில் நடைபெறவிருக்கிறது. சிங்கத்தின் குகைக்குள்ளே நுழைந்து அதன் பிடரியை உலுக்குவது போல, அன்றைக்கு நிலப்பிரபுக்களின் கோட் டையாக விளங்கிய தஞ்சை மண்ணிலே செங்கொடியை ஏற்றி, அவர்களின் கொட் டத்தை ஒடுக்கிய மாமனிதர் பி.எஸ்.ஆர். ஒன்றுபட்ட தஞ்சையின் வரலாற்றை எழுதுகிற எவராக இருந்தாலும் செங் கொடி இயக்கத்தையும், அதற்குத் தலை மையேற்ற பி.எஸ்.ஆரையும் பற்றிக் குறிப் பிடாமல் எழுத முடியாது. பேசுகிற இட மெல்லாம் தியாகமும், தோண்டுகிற இட மெல்லாம் கம்யூனிஸ்ட்களின் ரத்தமும் நிறைந்திருக்கிற பூமி அது. ஈடு இணை யற்ற வீரத்திற்கும், தியாகத்திற்கும் சொந் தக்காரர்கள் நாம் என நினைக்கிற போது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டிற்கும் மெய் சிலிர்க்கும், பெருமிதம் பொங்கிப் பெருகும். அன்றைக்கு விலங்கினும் கீழாக பண்ணை அடிமைகளாக நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனிதன் என்ற அந்தஸ்தையும், பிறகு மனிதர் களுக்குரிய உரிமைகளையும் பெற்றுத் தந்த மாபெரும் போராட்ட வரலாறே தஞ்சை மாவட்ட வரலாறு என்றால் மிகையல்ல. உரிமையைக் கோருவதே குற்றம் என்று கருதப்பட்ட காலத்தில், அதிலும் இதெல்லாம் நமது தலைவிதி என்று கருதி விதியே என சம்பந்தப்பட்ட மக்களே கருதிக் கொண்டிருந்த காலத் தில், அம்மக்களை ஒன்றுதிரட்டி, உணர் வூட்டி, போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திய வெற்றிச் சரித்திரம் அது. “வெல்ல முடி யாதது நம் வலிமை” என்ற மாவோவின் வைரவரிகளுக்கு செயல்வடிவம் கொடுத் தவர்கள் அந்தப் பண்ணையடிமைகள். உலகத்தின் எந்த மூலையிலும், தண் டனை முறைகளில் ஒன்றாக மாட்டுச் சாணத்தைக் கரைத்து மனிதர்களைக் குடிக்க வைப்பது என்பது இல்லை. இதைக்கண்டு பிடித்தவன் எவ்வளவு குரூர புத்தியுள்ளவனாக இருந்திருக்க வேண்டும். இதைச் சகித்துக் கொண்டு உழைப்பாளி மக்கள் வாழ்ந்தார்கள் என் பதை நினைக்கிற போதே நமக்கு நெஞ்சம் கொதிக்கிறது. அத்தகையவர்களை அணிதிரட்டி, தலைவர்களாக்கி, உள்ளாட்சி நிர்வாகிக ளாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்களாக தேர்ந்தெடுத்து எவருக்கும் சளைத்தவர்களல்ல, வாய்ப்பு கிடைத் தால் எங்களாலும் இவர்களுக்கு சம மாகச் செயல்பட முடியும் என்பதை நிரூ பித்துக் காட்டிய வரலாறு. பல புத்தகங்கள் வெளியிட வேண்டிய அளவுக்கு ஒவ் வொரு தோழரிடமும் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்க ளின் விடுதலைக்கான போராட்டத்தில் தோழர் பி.சீனிவாசராவுக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது. அதனால் தான் அம்மாவட்ட மக்களின் இல்லங் களில், உள்ளங்களில் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அத்தகைய தலைவர் பல பத்தாண்டுகள் வாழ்ந்த, நடந்த, போராடிய மண்ணில்தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடக்கிறது. இயக்கத்தின் நலன், மக்களின் நலன் என்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது கடைசி வரை வாழ்ந்து காட் டிய அவரது அருங்குணத்தை இன்றுள் ளவர்கள் மனதிலே கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி யாக, மனித உரிமைகளைக் காப்பதற்காக வும், மீட்பதற்காகவும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி எண்ணிலடங்கா போராட்டங்களை நடத்தியிருக்கிறது. அத்தகைய போராட்டங்களில் மாணிக் கமாய் ஜொலிப்பது வாச்சாத்தி வன் கொடுமைக்கெதிரான போராட்டமாகும். 20 ஆண்டுகாலம் இடைவிடாமல் நடத் திய போராட்டத்தின் விளைவுதான் வாச் சாத்தி வழக்கில் வெளி வந்துள்ள வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். அரசே, வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரத் தாக்கு தலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் அது. ஏதோ சில அதிகாரிகள் செய்த அத்துமீறிய செயல் என்று அதைக் குறிப் பிட முடியாது. தேடுதல் வேட்டைக்குச் சென்ற அதிகாரிகள் சட்டத்துக்கு விரோத மான இத்தகைய காரியங்களைச் செய்து விட்டார்கள் என்றால், அவை வெளிவந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும் – ஆறுதலும் கிடைக்கவும் அரசு முன்வந்து நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தையும் மூடி மறைத் தது மட்டுமல்லாமல், மக்களைத் தாக்கி, ஊரைச் சூறையாடி, இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய குற்றங்களைச் செய்தவர்களைப் பாது காக்கும் நடவடிக்கையில் முனைப்புடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டது அன்றைய அ.தி.மு.க. அரசு. வனத்துறையினருக்கு பயந்தும், பணிந் தும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் பழங் குடி மக்கள் – வாச்சாத்தி மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே, அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் போராட உணர்வு ரீதியாக அம்மக்களை தயார்ப் படுத்த வேண்டிய மிகப்பெரிய சவாலான பணி நமக்கு இருந்தது. பெரும்பாலான மக்கள் அதிகாரி களை கண்டால் குறிப்பாக, சீருடைப் பணியிலுள்ளவர்களைக் கண்டால் பயந்து நடுங்குவது என்ற நிலையில்தான் உள்ளனர். பெரும்பாலான அதிகாரிகளின் நடவடிக்கைகளும் அப்படித்தான் உள் ளன. மக்கள் பயந்து நடுங்க வேண்டு மென்றே அவர்களும் விரும்புகிறார்கள். “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்ற பழமொழி மக்கள் மனதில் ஆழ மாய்ப் பதிந்துள்ளது. இதையும் தாண்டி ஒரு சிலர் முன்வந்தால் ‘உனக்கெதுக்கு இந்த வேலை – நாளைக்கு உனக்கு ஒண் ணுன்னா யாரும் வரமாட்டாங்க’ என்று சொல்லித் தடுப்பதற்கு பலநூறு பேர் வரிசையில் நிற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையிலிருந்து வாச் சாத்தி பழங்குடி மக்களின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டத்தைப் பார்த் தால்தான் அது எவ்வளவு வலிமைமிக் கது; இத்தகைய வல்லமையை நாமும் பெற வேண்டும் என்ற உணர்வு ஒவ் வொருவருக்கும் ஏற்படும். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆசை வார்த்தைகள், பணத்தாசைகள், அவநம்பிக்கையை உருவாக்கும் சலிப் பான பேச்சுக்கள் என எத்தனையோ பிரம்மாஸ்திரங்களை எதிரிகள் எய்தனர். இதையெல்லாம் எதிர்கொண்டு ஊரையே ஓரணியில் இறுதிவரை நிற்க வைத்தது பெரும் சாதனை. இந்த ஒற்றுமை – கட்டுப்பாடு என் பது செயற்கையாக உருவாக்கப்பட்ட தல்ல. தங்கள் மீதான இழிவு துடைக்கப் பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர் கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஒரே சிந்தனையில் இருந்தது தான் அடிப்படை. மனித உரிமை மீறல்கள் நடைபெறு கிற போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதற்கெதிராகச் சமரசமற்ற போராட்டத்தை நடத்தியிருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்திக் கூற முடியும். உத் தப்புரம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு, திருக் கோவிலூர் இருளர் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, காவல் துறையினரின் அத்துமீறல் என கட்சியின் கவனத்துக்கு வந்த அனைத்துப் பிரச்ச னைகளிலும் நாம் முத்திரை பதித்திருக் கிறோம். அத்தகைய பெருமைகளுடன், மேலும் சாதனை படைக்க, திட்டமிட இருக்கிறது மாநாடு. ரத்தத்தால் சிவந்து போயிருக்கிற அந்த மண்ணை மேலும் சிவப்பாக்கும் வகையில், செங்கொடி ஏந்தி குடும்பத்துடன் அணிவகுத்து வாரீர். ‘இப்படைதோற்கின் எப்படை வெல்லும்’ என எக்காள முழக்கமிட்டு தியாக பூமிக்கு திரண்டு வருக என அன்போடு அழைக்கிறோம். கட்டுரையாளர், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Leave A Reply

%d bloggers like this: