ஓமலூர், பிப். 18 – பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசி ரியர் பணி நியமனத்தில் விதிமீறல்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இப் பல்கலைக்கழ கத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக் கிழமை நடத்திய திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா கக் கூறப்படுகிறது. இப் பல்கலைக்கழகத்தில் 16 பேராசிரி யர்கள், 20 இணைப் பேராசிரியர்கள், 71 உத விப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின் றனர். மேலும், 5 கௌரவ விரிவுரையா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக மானியக் குழு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறை யில் பின்பற்றாமல் ஆசிரியர் பணி நியம னம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகார் களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களும் அதன் நம்பகத் தன்மைக்காக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு பெற்றவர்கள் அளித்த அனுபவச் சான்றிதழ்களையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. போதிய முன் அனுபவம் இன்றி பணியில் சிலர் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட புகா ரின் பேரில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக ஊழல் தடுப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply