தேனி, பிப். 19- தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பெரியகுளத்தில் நடத்திய ரத்ததான முகாமை சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர் துவக்கிவைத்தார். பெரியகுளம் 10வது வார்டு நடுநிலைப்பள்ளியில் நடந்த ரத்ததான முகாமிற்கு ம.ம.க நகர செயலாளர் சிக் கந்தர் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக பொருளாளர் அப்துல்லா பத்ரி முன்னிலை வகித்தார். ஆரூண் ரசீத் வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் தமுமுக தேனி மாவட்ட தலைவர் ஏ.அஜ்மீர்காஜா சிறப்புரையாற்றினார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் ரத்ததான முகாமை துவக்கி வைத்து சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு, தாலுகா செயலாளர் எம். ராமச்சந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Leave A Reply