தேனி, பிப். 19- தமிழ்நாடு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் பிப்ரவரி 28ம் தேதி அகில இந்திய வேலை நிறுத் தம் நடைபெறுவதை யொட்டி தேனியில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க கூட் டமைப்பு அமைப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டினை பட்டுவளர்ச்சித் துறை அலு வலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கோவிந்த சாமி துவக்கிவைத்து பேசி னார். மாநாட்டில் சி.மு.இப் ராஹீம் (ஊரக வளர்ச்சித் துறை), முகமது அலி ஜின்னா (கருவூலம்), பேயத்தேவன் சு.சண்முகம் (சத்துணவு), இரா.முத்தையா (சாலைப் பணியாளர்), பவானந்தம் (சுகாதாரம்), தேவேந்திரன் (மருந்தாளுனர் சங்கம்), சு.ப.பழனி (ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்) ஆகி யோர் பேசினர். மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். ஞான திருப்பதி நன்றி கூறினார். மாநாட்டில் பல்வேறு சங் கங்களின் நிர்வாகிகள் ஏரா ளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் விருதுநகரில் அனைத்து சங்கங்கள் சார்பில், போக் குவரத்து பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு தொ.மு.ச பொதுச் செயலா ளர் பால்பாண்டி தலைமை யேற்றார். துவக்கி வைத்து தேமுதிக தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் கிளாடிஸ் பேசினார். ஏ.ஐ. டி.யு.சி தலைவர் ஞானசேக ரராஜா, சிஐடியு பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை ஆகியோர் விளக்கி பேசினர். சிஐடியு மாநில செயலாளர் எம்.மகாலட் சுமி சிறப்புரையாற்றினார். சிஐடியு தலைவர் வி.ரவிச்சந் திரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற் றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.