நாகர்கோவில், பிப். 19 – பிப்ரவரி 28 அகில இந் திய வேலைநிறுத்தத்தில் 2.5 லட்சம் முந்திரி ஆலை தொழி லாளர்கள் தமிழகம் முழுவ தும் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில், கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணா மலை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் முந் திரி தொழில் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 2.5 லட்சம் முந்திரி தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகி றார்கள். இத்தொழிலாளர் கள், பிப்ரவரி 28ல் நடை பெறும் வேலைநிறுத்தத் தில் முழுமையாக கலந்து கொள்கிறார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் இஎஸ்ஐ திட்டத் தின் கீழ் 200 படுக்கை வசதியு டன் கூடிய சிறப்பு மருத்துவ மனை அமைக்க வேண்டும், இபிஎப் திட்டத்தின்கீழ் ஓய் வூதியம் மாதம் குறைந்தபட் சம் 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது, காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழி லாளர் முறையை அகற்ற வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. இந்த வேலைநிறுத்தத் தில் முந்திரி தொழிலாளர் கள் முழுமையாக கலந்து கொள்வதுடன், அன்று நடை பெறும் ஆர்ப்பாட்டங்களி லும் பெருந்திரளாக பங் கேற்கிறார்கள். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு முந்திரி பருப்பு தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) பொதுச் செயலாளர் பி.சிங்காரன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: