பாதைகள் எல்லாம் நாகையை நோக்கி… – ந.காவியன் பாதைகள் எல்லாம் நாகையை நோக்கி பயணம் செல்கிறது… கீதங்கள் எல்லாம் மார்க்சியம் ஏந்தி காற்றில் ஒலிக்கிறது… வீதிகள் எல்லாம் அரிவாள் சுத்தியல் வண்ணம் மிளிர்கிறது… வையக மெல்லாம் நவயுகப் புரட்சி விரைவில் தெரிகிறது… வெண்மணி தியாகிகள் நெருப்பில் எடுத்த செஞ்சுடர் ஒளிர்கிறது… திருமெய்ஞானம் தியாகிகள் நரம்பில் செங்கொடி பறக்கிறது… எத்தனை தலைவர்கள் எத்தனை தியாகிகள் நாகையில் சங்கமமே… இத்தரை வியக்க மாநில மாநாடு வெல்வது சத்தியமே! -(பாதைகள் எல்லாம்….) இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற காட்சிகளே… செம்படை வீரர்கள், தோழர்கள் பேரணி லட்சோப லட்சங்களே… நாளைய உலகம் நமதென சாற்றும் நம்பிக்கை விண்மீன்களே! வாழிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாகைகள் சூடுகவே!

Leave a Reply

You must be logged in to post a comment.