இஸ்லாமாபாத், பிப். 19- கைபர் பழங்குடியினர் பகு தியில் நடந்த குண்டுவெடிப் பில் தாலிபான் எதிர்ப்பு ‘லஸ் கர்’ படையினரைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந் தனர். வடமேற்கு பாகிஸ்தா னில் கைபர் கணவாய் அருகே பழங்குடி மக்கள் வசித்து வரு கின்றனர். சாலை யோரத்தில் புதைக்கப்பட்டிருந்த குண் டை, லஸ்கர் படை யினர் எல் லைச் சாவடி அரு கே வந்த வுடன் தீவிரவாதிகள் வெடிக் கச் செய்தனர். இந்த எல்லைச் சாவடி முன்பு தாலிபான் தீவிரவாதிகளிடம் இருந்தது. மங்கல்பாக் அப்ரிடி தலை மையில் செயல்படும் தடை செய்யப்பட்ட லஸ்கர் – இ – இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு, குண்டை வெடித் திருக்கக் கூடும் என்று கூறப் படுகிறது. தாலிபான்களுக்கு எதிரான தனியார் படைகளை லஷ்கர் – இ- இஸ்லாம், டெஹ் ரிக் – இ- தாலிபான் பாகிஸ் தான் ஆகிய தீவிரவாதக் குழுக்கள் குறிவைத்து தாக்கு கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.