சென்னை, பிப். 19 – பள்ளிகளில் ஆசிரியர் கள் முறையாக கற்பிக்கி றார்களா, மாணவர்கள் அதை புரிந்து கொள்கின்ற னரா என்பதை கண்காணிக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார். தமிழகத்தின் கல்வி நிலை குறித்த – அசர் 2011 – ஆண்டறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது: இந்தியாவில் சுதந்திரத் துக்கு முன்பு தமிழகம்தான் கல்வியில் சிறந்து விளங்கி யது. ஆனால், இப்போது நிலைமை மோசமாகிவிட் டது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டிய லில் இந்தியா உள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பொருளாதார நிலை மாறி, ஆசியாவுக்கு முக்கியத்துவம் கொடுக் கின்ற காலம் இது. இப் போதே உலகின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியா அனைத் துத் துறைகளிலும் வேக மாக முன்னேற வேண்டும்; அதேநேரத்தில், தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டு கின்ற மாநிலமாக இருக்க வேண்டும். இது நிறைவேற வேண்டுமானால், கல்வியில் நாம் சிறந்து விளங்க வேண் டும். ஆனால், அசர் உள் ளிட்ட பல்வேறு அமைப்பு களின் ஆய்வறிக்கைகளைப் பார்க்கின்றபோது, நாம் எந்த அளவுக்கு பின்தங்கி யுள்ளோம் என்பது தெரிகி றது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித் திருக்கிறது, ஆனால் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆய்வறிக்கையின் அனைத்து நிலைகளிலும் தமிழகம் மிகவும் பின்தங்கியே உள் ளது என்றார் ஜி. விஸ்வ நாதன்.

Leave a Reply

You must be logged in to post a comment.