திருச்சிராப்பள்ளி,பிப்.19- முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் திரு மணவிழாவில் பங்கேற்பதற் காக திமுக தலைவர் கருணா நிதி ஞாயிறன்று காலை திருச்சி வந்தார். பின்னர் நிரு பர்களுக்கு அவர் பேட்டியளித்தார். கேள்வி : சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நீங்கள் எப்போது பிரச்சாரம் செய்வீர்கள்? பதில் : அதுபற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை கேள்வி : சங்கரன்கோவிலில் அரசு இயந்திரம் பயன்படுத் தப்படுகிறதா? பதில் : பயன்படுத்தப்படு கிறது தவறாக. ஆளும் கட்சிக்கு ஆதராவாக. கேள்வி : பெங்களூரு நீதிமன் றத்தில் சசிகலா அளித்த சாட்சியம் குறித்து உங்களின் கருத்து என்ன? பதில் : நான் தற்போது நாட கங்களை நம்புவதில்லை. கேள்வி : உங்கள் தலைமை யில் தான் நடராஜனுக்கும் சசிகலாவிற்கும் திருமணம் நடந்தது. இப்போது நடராஜன் திடீரென கைது செய்யப் பட்டுள்ளாரே? பதில் : வருந்தத்தக்கது. கேள்வி: சங்கரன்கோவில் தேர்தலில் அனைத்து கட்சி களும் தனித்து போட்டியிடு வதால் வாக்குகள் சிதறாதா? பதில் : மற்றகட்சிகள் இது குறித்து யோசித்தால் நாங் களும் பேசி முடிவு செய்து அறிவிப்போம். கேள்வி: சங்கரன் கோவில் தேர்தலில் எதை வைத்து பிரச்சாரம் செய்வீர்கள்? பதில் : ஆட்சியாளர்களின் அராஜகம், அநீதி, அக்கிரமம், மக்கள் நலப்பணிகளை விட்டு விட்டு மற்றப்பணிகளில் தலையிட்டு செயல்படுவது, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தை இருண்ட மாநில மாக ஆக்கி உள்ளதை விளக்கி பிரச்சாரம் செய்வோம் கேள்வி : கொச்சியில் கட லில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டு கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். இப்பிரச்ச னையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலி யுறுத்துவீர்களா? பதில் : மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரு கிறது. தக்கநடவடிக்கை எடுக் கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர் பேட்டி யளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: