சேலம், பிப். 19 – மின்வெட்டு பிரச்சனை யால் தமிழகத்தில் விசைத் தறி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சிறு விசைத்தறி ஏற்றுமதியாளர் ஜவுளி உற்பத்தி சேவா சம் மேளன தலைவர் அப்பு செட்டியார் கூறியதாவது:- தமிழகத்தில் சேலம், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, ராஜபாளையம், சத்திரப் பட்டி, கரூர், வெள்ளகோயில், ராசிபுரம் ஆகிய இடங்க ளில் அதிகளவில் விசைத் தறிகள் இயங்குகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள சிறு விசைத்தறியாளர்களை யும் சேர்த்து மாநிலம் முழு வதும் 5 லட்சம் விசைத்தறி கள் இயங்குகின்றன. மாநிலம் முழுவதும் அனைத்து விசைத்தறிகளி லும் சேர்த்து தினமும் 1.50 கோடி மீட்டர் துணி வகை கள் உற்பத்தி செய்யப்படுகி றது. தற்போது தொடர் மின்வெட்டு காரணமாக விசைத்தறிகள் தொடர்ந்து இயங்க முடியாமல் உள்ளன. குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர் எடுத்தவர்கள் நூல் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் துணி உற்பத்தி பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. ஏற் றுமதி ஆர்டர் கொடுத்தவர் களுக்கு 45 நாள் முதல் 60 நாட்களுக்கு துணி டெலிவரி செய்ய வேண்டும். ஆனால் மின்வெட்டால் குறிப்பிட்ட நாட்களுக்குள் துணிகளை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் தொடர்ந்து கிடைத்து வரும் ஏற்றுமதி வாய்ப்பும் பறிபோகும் சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. மின்வெட்டால் நெசவு நெய்தல், வைண்டிங், வார்ப் பிங் என 25 லட்சம் தொழி லாளர்கள் நேரடியாகவும், டையிங், பிரிண்டிங், டைல ரிங் என மறைமுகமாக 10 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்சனை யில் மக்களுக்கு அரசு நம் பிக்கையூட்டி அதை முனைப்பு டன் செயல்படுத்தினால் சீரான மின்சாரம் கிடைக்க வழி பிறக்கும் என்று அப்பு செட்டியார் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: