திருச்சி, பிப். 19- நிலஅபகரிப்பு வழக்கில் தஞ் சாவூர் போலீசாரால் கைது செய் யப்பட்ட சசிகலா கணவர் நட ராஜனை மார்ச் 2ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார் . தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் நட ராஜன் கைது செய்யப்பட்டார். விளார் கிராமத்தில் பைபாஸ் சாலை அருகே தனக்கு சொந்த மான 15 ஆயிரம் சதுரஅடி நிலத்தை சசிகலா கணவர் நட ராஜன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்து கொட் டகை போட்டு உள்ளார் என்று ராமலிங்கம் தனது புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். சென்னை பெசன்ட்நகர் வீட் டில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நடராஜனை ஞாயிறன்று அதிகாலை தஞ்சா வூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக காவல் நிலையத் தில் டிஐஜி அமல்ராஜ் முன்னி லையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடராஜன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் மாலதி முன்பு ஆஜர் செய்தனர். நடராஜனை மார்ச் 2-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டதைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டார். மேலும் இருவர் கைது வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட் மாலதி, நடராஜனை மார்ச் 2ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து நடராஜன் திருச்சி மத் திய சிறையில் அடைக்கப்பட் டார். மேலும் இந்த வழக்கில் நட ராஜனின் அண்ணன் சாமி நாதன், அக்காள் மகன் சின் னையா என்கிற வெங்கடேசன், கூட்டாளிகள் சுரேஷ், இளவழ கன், குபேந்திரன், மாரிமுத்து ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டுள் ளனர். இதில் சின்னையா என்கிற வெங்கடேசனையும், கூட்டாளி குபேந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: