நாகப்பட்டினம், பிப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ் நாடு மாநில மாநாடு பிப்ர வரி 22 முதல் 25 வரை நாகையில் நடைபெறுவதை யொட்டி, திருக்கடையூர் சன்னதி வீதியில் சனிக் கிழமை இரவு மாநில மாநாட்டு விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டு நிதியளிக்கப் பட்டது. மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ சிறப் புரையாற்றி, மாநில மாநாட் டுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுக் கூட்டத்திற்குத் தரங்கம்பாடி வட்டச் செய லாளர் வி.சீனிவாசன் தலை மைவகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. கலைச்செல்வி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.கோவிந்தசாமி, என்.செல் வம், ஏ.லத்தீபு, வட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், காபிரியேல், கே.பி.மார்க்ஸ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரையாற் றினர். மாநில மாநாட்டு நிதியளிப்பு சிபிஎம் தரங்கம்பாடி வட்டக்குழு சார்பில் மாநில மாநாட்டு நிதியாக ஏற்கெ னவே ரூ.3 லட்சத்து 7 ஆயி ரம் முதல்தவணையாக அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2-வது தவ ணையாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிதியைப் பொதுக் கூட்ட மேடையில் வட்டச் செய லாளர் வி.சீனிவாசன் வழங்க, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பெற்றுக்கொண் டார். நிதியைப் பெற்றுக் கொண்டு அவர் சிறப்புரை யாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: