மதுரை, பிப்.19- மதுரையில் மாவட்ட திமுக மீனவரணி அமைப் பாளர் பி.டி.மணிமாறன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகரைச் சேர்ந் தவர் சுப்பிரமணியம்(50). இவர் மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள மீனாட்சிபஜாரில் கடைவைத்துள் ளார். இந்தக் கடையை மணிநகரத்தைச் சேர்ந்த திமுக மதுரை மாவட்ட முதல் மீனவரணி அமைப்பாளர் பி.டி.மணிமாறன் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். இந்தக்கடை தனது மகள் ஜெனிமாஸ் பெயரில் இருப் பதாகக்கூறி 9.60 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு பதிவு செய்யப்படாத கிரயப்பத்திரத்தை சுப்பிரமணி யத்திடம், மணிமாறன் வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்தக்கடை மாநகராட்சிக்குச் சொந்தமானது என சுப்ரமணியத்திற்குத் தெரியவந்தது. இதுகுறித்து மதுரை ஜே.எம் 2 ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் மனுச் செய்தார். இவரது மனுவை விசாரித்த நீதிபதி, காவல் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து திலகர்திடல் காவல்துறை ஆய்வா ளர் சீனிவாசன், விசாரணை நடத்தி பி.டி.மணி மாறனை கைது செய்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: