மத்திய அரசு 1991-ம் ஆண்டிலி ருந்து நவீன தாராளமயக்கொள்கையை வேகமாக அமலாக்கி வருகிறது. இக்கா லத்தில் தமிழகத்தை மாறி மாறி திமுக மற்றும் அதிமுக கட்சிகள்தான் ஆண்டு வந்துள்ளன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பரிசீலித்தால் இந்த இரு கட்சிகளும் பின்பற்றி வந்துள்ள கொள் கைகள் ஏழை எளிய மக்களின் வாழ்க் கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற் படுத்தவில்லை என்பதை உணர முடியும். தமிழகத்தில் தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகியவற்றில் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த ஐந் தாண்டுகளில் அகில இந்திய சராசரி யை விட 2 சதவிகிதம் குறைந்துவிட்டது; 2007-2011 ஆகிய ஆண்டுகளில் விவ சாய உற்பத்தி குறைந்து, வளர்ச்சி விகி தம் 0.69 ஆக சரிந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மற்றும் வேறு சில மாவட்டங்களிலும் கார் மற்றும் மின் னணு தொழிற்சாலைகள் துவங்கப்பட் டிருப்பதை சுட்டிக் காட்டி, தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதாக கூறுகின் றனர். மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது குறைவான வளர்ச்சி என்பது மட்டு மல்ல, இந்த வளர்ச்சியின் பலன் கூட ஏழை, எளிய மக்களுக்கு கிட்டவில் லை என்பதுதான் உண்மை நிலை. புதிதாக துவங்கப்பட்டுள்ள தொழில்க ளில் நிரந்தரத் தொழிலாளர்களை விட காண்டிராக்ட் தொழிலாளர்களே அதிகம் என்ற நிலையில், வளர்ச்சி என்பது வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியாகத்தான் உள்ளது. மத்தியில் பாஜக மற்றும் காங் கிரஸ் தலைமையிலான அரசுகள் கடந்த 20 ஆண்டு காலமாக கடைப்பிடித்து வந்த நவீன, தாராளமயக் கொள்கைக ளையே மாநிலத்தில் திமுக, அதிமுக தலைமையிலான அரசுகள் கடைப் பிடித்தன. இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் கட்டுப்படியாகாத தொழி லாக மாறியுள்ளது. இதை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் பிழைப்புக்காக நகரத் தை நோக்கி இடம்பெயரும் துயர நிலை உருவாகியுள்ளது. கல்வியில் குறிப்பாக உயர் கல்வி யில் தனியார் சுயநிதிக் கல்வி நிலையங் களை அனுமதித்து, இந்தியாவில் அதி கமான சுயநிதி பொறியியல் மற்றும் மருத் துவக் கல்லூரிகள் தமிழகத்தில் துவங் கப்பட்டுள்ளன. சுயநிதிக் கல்லூரிக ளில் அரசு தீர்மானித்த கல்விக் கட்ட ணங்களுக்கு மேல் பல மடங்கு கூடுத லாக கல்விக்கட்டணம் வசூலிப்பதால் ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புள்ள உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது. இதனால் சமூகத்தில் உயர்சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி என்ற பிரிவினையைப் போல் வேலை வாய்ப்புள்ள கல்வி பெறும் வசதிபடைத் தவர்களும் வேலைவாய்ப்புள்ள கல்வி கிடைக்காத ஏழை -எளிய குடும்பங்க ளும் என புதிய ஏற்றத்தாழ்வு சமூகத் தில் உருவாகி வருகிறது. தொடர்ச்சியான நிர்ப்பந்தத்திற்கு பிறகே சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியாக பொதுப்பாடத்திட்டத்தை முந்தைய திமுக அரசு கொண்டு வந்தது. அதற்கும் வேட்டு வைக்க அதிமுக அரசு முயன்ற போது அதை எதிர்த்துப்போராடினோம். மற்றபடி கல்விக்கொள்கையை பொறுத் தவரை மாறி மாறி வந்த இரு அரசுக ளுமே சுயநிதிக் கல்லூரி நிறுவனங்க ளுக்கு ஆதரவான அணுகுமுறை யையே பின்பற்றி வந்துள்ளன என்பது வெள்ளிடைமலை. தமிழகத்தில் பல அரசு மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகள் இருந்தாலும் போதுமான மருத்துவர்க ளும் செவிலியர்களும் ஊழியர்களும் தேவையான மருந்தும் இல்லாத தால், சாதாரண ஏழை-எளிய மக்கள் கூட தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. காசு உள்ளவர்களுக்கே தனியார் மருத்துவமனைகளில்… — தொடர்ச்சி 3ம் பக்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.