மருத்துவ வசதி என்ற ஏற்றத்தாழ்வு இதில் நீடிக்கிறது. இந்த நிலையை ஏற்படுத் தியதில் திமுக – அதிமுக ஆகிய இரு கட் சிகளின் ஆட்சிக்கும் பொறுப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நில மோசடி, வரலாறு காணாத ஊழல், மணல் கொள்ளை, எல்லா மாவட்டங்களிலும் ஆளுங் கட்சியின் ஆதிக்கம் போன்ற சூழ லில் தமிழகத்தில் மூச்சுத்திணறு வது போன்ற நிலைமை உருவானது. திமுக தலைமையிலான இத் தகைய ஆட்சியை மாற்றி அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு மக்கள் மத்தியில் கூடுதலான எதிர் பார்ப்பு இருந்தது. ஒரு சில நலத் திட்டங் களை அறிவித்திருந்தாலும் பல துறை களில் அதிமுக அரசின் அணுகுமுறை யில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதிமுக அரசு, விவசாயத் தொழிலா ளர் நலவாரியச் சட்டத்தை ரத்து செய்து விட்டது; தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு சட் டம் கொண்டுவர மறுக்கிறது; பரமக்குடி துப்பாக்கிச் சூடு; திருக்கோவிலூரில் இருளர் இனப் பெண்கள் பாலியல் பலாத் காரம்; காவல்நிலைய மரணங்கள் என ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்பது மாதங் கள் ஆன பின்பும் காவல்துறையின் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. இத்த கைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலங் களில் மக்கள் நலனுக் காக போராடி யது போல் அதிமுக ஆட் சிக்கு வந்தபிற கும் பல இயக்கங்களை நடத்தி வருகிறது. பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, உத்தேச மின்கட்டண உயர்வு போன்ற விலைஉயர்வை எதிர்த் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல இயக்கங்களை நடத்தியுள்ளது. மத் திய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகவும் மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடி வருகிறது. இத்தகைய போராட்டங்களில் களம்கண்ட மார்க் சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் நாகையில் கூடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசி யம் உள்ளது. அது அரசியல் கட்சிகளின் கூட்டணி சார்ந்தது மட்டுமல்ல, மாற்றுக் கொள்கை, மாற்றுத் திட்டத்தை அடிப் படையாகக் கொண்டுள்ளது. நவீன தாரா ளமயமாக்கல் கொள்கைக்கு ஆதரவான- வகுப்பு வாதத்துடன் சமரசம் செய்யக் கூடிய கொள்கைக்கு மாற்றாக, இடதுசாரி ஜனநாயக மாற்றாக அது அமைந்திட வேண்டும். அதற்கான பாதையை உரு வாக்குவதாக, செப்பனிடுவதாக நாகை யில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அமை யும். விரிவான விவாதத்தை நடத்தும். ஆக் கப்பூர்வமான முடிவுகளை எடுக்கும். அந்த முடிவுகள் தமிழகத்தை ஒரு புதிய திசை வழியில் வழிநடத்தும் என்பது உறுதி.

Leave a Reply

You must be logged in to post a comment.