கோவை, பிப். 19- தமிழகத்தில் சீரான மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று சைமா கோரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் எஸ். தின கரன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் 25 முதல் 30 சதவீத மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தின் தென் பகுதியி லும், மேற்கு பகுதியிலும் உள்ள தொழிற்சாலைகள் 70 சதவீத மின்வெட்டை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஜவுளி மில் கள் ஒரு நாளைக்கு 8 மணி நேர மின்வெட்டால் பாதிப் படைந்து உள்ளது. முக்கிய மான நேரத்தில் 4 மணி நேரமும், இரவு நேரத்தில் 20 சதவீதமும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஜவுளி மில்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப் படுகின்றன. அதே நேரத்தில் 1800 மெகாவாட் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத் தும் தொழிற்சாலைகளுக்கு எந்த மின்வெட்டும், கட்டுப் பாடும் இல்லை. எனவே அனைத்து தொழிற் சாலைகளுக்கும் சீரான மின் வெட்டு அமல்படுத்திட வேண்டும். இதற்கான நடவ டிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா எடுக்க வேண் டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மிக விரைவில் திறக்கவும் முதல மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply