பெர்லின், பிப். 19- தொழிலதிபர்களுடன் முறையற்ற வகையில் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நெருக் கடியில் உள்ள ஜெர்மனி ஜனாதிபதி கிறிஸ்டியன் ஷல்பை விசாரிப்பதில் தடை உள்ளதால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என நாடாளு மன்றத்தை விசாரணையா ளர்கள் கேட்டு கொண்ட நிலையில், ஜனாதிபதி பதவி விலகினார். மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஜனாதிபதி, ஜெர்மனிக்குத் தேவை என்பதால், தாம் பொறுப்பில் இருந்து விடுபடுவதாக அவர் தெரி வித்தார். முழுமையான விசார ணை மூலம் தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து விலக முடியும் என அவர் கூறினார். ஐரோப்பிய பொருளா தாரப் பிரச்சனை இடையே, பணக்காரர்களுடன் முறை கேடான உறவுகளை மேற் கொண்ட ஜனாதிபதி நட வடிக்கையால் அதிபர் ஏஞ் சலா மெர்கெலின் அரசு, மேலும் பிரச்சனையில் தவித்துள்ளது. மார்டெல், வெள்ளிக்கிழமை இத்தாலி பிரதமர் மரியோ மான்டி யுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஷல்ப் ராஜினா மாவால் மெர்கெல் பய ணத்தை தள்ளிவைத்தார். திங்கட்கிழமை (பிப்.20) பிரஸ்சல்ஸ்நகரில் ஐரோப் பிய நிதியமைச்சர்கள் கூட் டம் நடக்கிறது. இதில் அதி பர் கலந்து கொள்கிறார். ஷல்ப் ராஜினாமா விவகா ரம் ஜெர்மனியின் புகழை ஐரோப்பிய நாடுகளில் குறைத்துள்ளது மெர்க லுக்கு மனப்புழுக்கத்தை யும் தந்துள்ளது. இரண்டு ஜனாதிபதிகளை அவர் தொடர்ந்து இழந்துள்ளார். ஷல்ப்க்கு முந்தைய ஜனாதிபதி ஹோர் ஸ்ட் கோலர் 2010ம் ஆண்டு மே மாதம் பதவியை ராஜி னாமா செய்தார். ஜெர்மனி ராணுவம் நாட்டின் நலனை பாதுகாப்பதாக கூறிய போது, பொதுமக்களின் கோபத்திற்கு ஆளான ஹோர்ஸ்ட் கோலர் பதவி விலகினார். ஷல்ப்க்கு பதிலாக, தனது கன்சர்வேடிவ் கட்சி யினருடனும், எதிர்க்கட்சி யினரான சோசியல் டெமாக்ரட், கிரீன் கட்சி யினருடனும் ஆலோசனை செய்து, கூட்டு வேட்பாள ரை ஜனாதிபதி பதவிக்கு அறிவிப்போம் என மெர் கெல் கூறியிருந்தார். எந்தக் கட்சியையும் சாராத வேட்பாளரை கண்டறிவதற்கு, சோசியல் டெமாக்ரட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் தாமஸ் ஓபர்மான், அதிபரை சந்தித்தார். அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிபருக்கு கிரீன் கட்சி கடிதம் எழுதியது.

Leave A Reply

%d bloggers like this: