சென்னை, பிப். 19 – சென்னையில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல, தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டை 20 சதவீதத்திலி ருந்து 40 சதவீதமாக உயர்த் தவும், மின்சார வார விடு முறையை மீண்டும் அறிமுகம் செய்யவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இன் னும் ஓரிரு நாட்களில் இந்த புதிய நடைமுறை அம லுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் 3000 மெகா வாட் அளவுக்கு மின் பற் றாக்குறை உள்ளது. இதனால், சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்க ளில் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு அமலில் இருந் தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள ஒரு சில யூனிட்டுக ளில் உற்பத்தி பாதிக்கப்பட்ட தால், நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால், பிற மாவட் டங்களில் 8 மணி நேரத்துக் கும் மேலாக மின்வெட்டு இருந்தது. இதனால் தொழில் நிறுவனங்களின் உற்பத்திக் கடுமையாக பாதிக்கப்பட் டது. தொழில் நிறுவனத்தி னரும், பல்வேறு அமைப்பு களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் மின் நிலை மையை சமாளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலை மையில் தலைமைச் செயல கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் பின், மின்வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடை பெற்ற ஆலோசனைக் கூட் டத்தில், மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்த பரிந்து ரைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமி ழக அரசு இப்போது ஒப்பு தல் அளித்துள்ளது. இதன்படி, சென்னை யில் இப்போது நடைமுறை யில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டு, இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு இப்போது நடைமுறையில் உள்ள 20 சதவீத மின்வெட்டு, 40 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் மின்சார வார விடுமுறையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன் னும் ஒருசில நாட்களில் இந்த புதிய நடைமுறை அம லுக்கு வரும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய நடைமுறை மூலம் மின்சாரம் மிச்சமாவ தால், பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் குறை யும். இப்புதிய நடைமுறை யால் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்பதால், இதை தொழில் நிறுவனங்க ளும், பல்வேறு அமைப்புக ளும் வரவேற்றுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: