கொல்கத்தா, பிப். 19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில 23வது மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிகப்பிரம்மாண் டமான பேரணியோடு ஞாயி றன்று நிறைவு பெற்றது. மாநாடு கட்சியின் மாநி லச் செயலாளராக மீண்டும் பிமன்பாசுவை தேர்வு செய் தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில மாநாடு கடந்த 5 நாட்களாக கொல்கத்தா வில் நடைபெற்றது. பிரதி நிதிகள் மாநாடு சனிக்கிழ மை நிறைவுபெற்றது. மாநாட்டில் 75 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளராக மீண்டும் பிமன்பாசுவை, மாநிலக்குழு ஏகமனதாக தேர்வு செய்தது. கோழிக்கோட்டில் ஏப் ரல் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு 175 பிரதிநிதி களும் தேர்வு செய்யப்பட் டனர். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். பேரணி மாநாட்டின் நிறைவாக ஞாயிறன்று கொல்கத்தா வில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் லட்சோப லட்சம் மக்கள் திரண்ட மிகப்பிரம்மாண்டமான செம்படைப்பேரணியும் பொதுக்கூட்டமும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா ளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பிமன் பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் புத்ததேவ் பட்டாச்சார்யா, சீத்தாராம் யெச்சூரி, முகமது அமீன், நிருபம் சென், பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர் கள் உரை நிகழ்த்தினர்.

Leave A Reply

%d bloggers like this: